அதிசயம் நடக்கும்.. பெற்ற 2 மகள்களை நரபலியிட்ட பெற்றோர்கள்.. சித்தூரில் பயங்கரம்.!

அதிசயம் நடக்கும்.. பெற்ற 2 மகள்களை நரபலியிட்ட பெற்றோர்கள்.. சித்தூரில் பயங்கரம்.!

Update: 2021-01-25 12:17 GMT

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பெற்ற 2 மகள்களை நரபலியிட்ட பெற்றோர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு அவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் நாயுடு கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் அலேக்யா 27, மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வருகிறார். அதே போன்று 2வது மகள் சாயி திவ்யா 22, இவர் இசை கல்லூரியில் படித்து வருகிறார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பெற்றோர்களுடன் கடந்த 10 மாதத்திற்கும் மேலாக வீட்டிலேயே வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புருஷோத்தம் நாயுடு வீட்டில் பூஜைகள் செய்து வந்துள்ளார். தனது வீட்டில் விரைவில் பல அற்புதங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது என அக்கம் பக்கத்தினர் மத்தியில் கூறியுள்ளார். இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் பூஜை செய்துள்ளார். அப்போது தனது 2 மகள்களையும் உடற்பயிற்சி செய்யும் மம்பல்ஸ் மூலமாக தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் இரண்டு பெண்களும் ரத்த வெள்த்தில் சரிந்து இறந்துள்ளனர்.

இதன் பின்னர் வீட்டில் பூஜைகள் செய்ய தொடங்கியுள்ளனர் அந்த தம்பதியினர். அப்போது வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்டு அருகாமையில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை தொடர்ந்து சித்தூர் டி.எஸ்.பி. ரவி மனோகராச்சாரி மற்றும் அவருடன் இன்ஸ்பெக்டர் சில காவலர்கள் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் சென்று பார்த்த போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 2 பெண்களும் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இதனை தொடர்ந்து உடல்களை கைப்பற்றி, வீட்டில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் பெற்றோர்களிடையே விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறிய பதில் போலீசாரை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதாவது பெண்களை நரபலியிட்டு பூஜை நடத்தினால், வீட்டிற்கு அதிகமான நன்மைகள் வந்து சேரும். மேலும், எனது 2 பெண்களும் மீண்டும் உயிருடன் வந்து விடுவார்கள் எனவும் கூறினர். இதனையடுத்து போலீசார் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் யாரையும் அனுமதிக்காமல் போலீசார் காவல் காத்து வருகின்றனர். முக்கிய தடயங்கள் கிடைக்கப் பெறலாம் எனவும் கூறப்படுகிறது. பெற்ற மகள்களை கொன்ற சம்பவம் சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திராவையே அலற செய்துள்ளது.
 

Similar News