இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவதற்கான ஆய்வுக்கு அனுமதி !

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியாக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. ஆனால் இது பற்றிய ஆய்வுகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.;

Update: 2021-08-11 10:23 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே உள்ளது. ஒரு தடுப்பூசி செலுத்திய பின்னர் சிறிது காலம் கழித்து மீண்டும் இரண்டாவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியாக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. ஆனால் இது பற்றிய ஆய்வுகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை கலந்து பரிசோதனை செய்ததில் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் இன்று அனுமதி கொடுத்துள்ளது. இதில் இரண்டு வகையான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கலாம் என தெரியவந்துள்ளது.

Source: Dailythanthi

Image Courtesy:இந்தியன் எக்ஸ்பிரஸ் 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/11095507/Drugs-Controller-General-of-India-gives-nod-for-conducting.vpf

Tags:    

Similar News