ஆப்கான் மக்களுக்காக சர்வதேச அரங்கில் குரல் கொடுக்கும் பிரதமர் மோடி !
ஜி20 நாடுகள் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதும் அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரில் தாலிபான்கள் வெற்றி பெற்றனர். இதனை அடுத்து தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்தனர். தாலிபான்களின் ஆட்சியில் உணவு தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில், ஆப்கான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தை இத்தாலி ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி காணோலி காட்சி வாயிலாக பங்கேற்றார்.
இதில் அவர் பேசியதாவது, ஆப்கானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும். பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கான் மாற நாம் அனுமதிக்க கூடாது எனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
ஆப்கான் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் ஆப்கான் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆப்கான் மக்கள் அடிப்படை தேவைகளுக்காக போராடி வரும் நிலையில் பிரதமரின் இந்த வேண்டுகொள் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.