மோடியை 'லவோக்சியன்' என்று அழைக்கும் சீனர்கள்: வெளி நாட்டில் மாஸ் காட்டும் இந்திய பிரதமர்!
சீனாவில் உள்ள நெட்டிசன்கள் பிரதமர் மோடியை லவோக்சியன் என்று அழைக்கிறார்கள்.
உலகத் தலைவர்களின் பட்டியலில் கடந்த இரண்டு முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீடித்து வருகிறார். குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களால் அறியப்பட்ட தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்.அந்த வகையில் தற்பொழுது சீனாவில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் வெளியிட்ட தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது சீனாவில் பத்திரிக்கையாளராக இருக்கும் சுன்சான் என்பவர் தான் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மூன்று ஆண்டுகளாக நீதி திறந்த போதிலும் சீனாவை சேர்ந்த உள்நாட்டு சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நற்பெயரைதான் பெற்று வந்து இருக்கிறார்.
காரணம் மற்ற நாட்டு தலைவர்களைப் போல போர் செய்ய வேண்டும் என்று முடிவை எடுக்காமல், அமைதியான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எடுக்க வேண்டும் என்று அவருடைய நோக்கம்தான் இதற்கு காரணம். மேலும் சீனாவில் உள்ள நெட்டிசன்கள் பிரதமர் மோடியை தற்பொழுது மோடி லவோக்சியன் என்று பெயரிட்டு தான் அழைத்து வருகிறார்கள். குறிப்பாக அதற்கு அழிவில்லாதவர் என்று பொருள். மோடி அழிவில்லாதவர் மற்றும் மிகவும் அற்புதமான தலைவர் என்று அதற்கு பொருள் படுவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் பின்பற்றும் கொள்கைகள் முந்தைய கொள்கைகளில் இருந்து மாறுபட்டவை என்பது அவர்களுடைய கருத்து. மேலும் தன்னுடைய 20 வருட சர்வதேச பத்திரிக்கை அனுபவத்தில் வெளிநாட்டு தலைவர்களை சீன நெட்டுசன்கள் இவ்வாறு புகழ்ந்து இருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar