இந்தியா - டென்மார்க் உறவு... 75-வது ஆண்டு நிறைவு... இந்தியாவுக்கு கிடைக்கும் அடுத்த அங்கீகாரம்!

டென்மார்க்கின் பிரதமருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

Update: 2023-04-22 01:30 GMT

இந்தியா-டென்மார்க் இடையேயான பசுமை உத்தி பங்களிப்பின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த இத்தலைவர்கள், உயர்நிலைப் பரிமாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்தியாவில் ஜி20 முன் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் ஃப்ரடெரிக்சென், டென்மார்க்கின் முழு ஆதரவை தெரிவித்தார். இந்தியா- டென்மார்க் உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு 2024-ல் கொண்டாட இத்தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.


டென்மார்க் பிரதமர் மேன்மை தங்கிய திருமதி மெட்டே ஃப்ரடெரிக் சென்னுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். டென்மார்க் பிரதமராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் ஃப்ரடெரிக்சென்னுக்கு, பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-டென்மார்க் இடையேயான பசுமை உத்தி பங்களிப்பின் முன்னேற்றம் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். உயர்நிலைப் பரிமாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.


ஜி20-ன் தற்போதைய இந்தியத் தலைமைத்துவம் பற்றியும், அதன் முக்கிய முன்னுரிமைகள் பற்றியும் பிரதமர் ஃப்ரடெரிக்சென்னிடம் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் முன் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் ஃப்ரடெரிக்சென் அவற்றுக்கு டென்மார்க்கின் முழு ஆதரவை தெரிவித்தார். இந்தியா- டென்மார்க் உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு 2024-ல் பொருத்தமான முறையில் கொண்டாடவும், தங்களின் உறவுகளை மேலும் அதிகரிப்பதற்கான துறைகளைக் கண்டறியவும் இவ்விரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News