'இந்த வேலையை முடிக்க சரியான தலைவர் மோடி மட்டுமே' - ஒரே வார்த்தையில் அடித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

இந்திய பிரதமர் மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் உலகநாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது,;

Update: 2023-02-12 12:45 GMT

இந்திய பிரதமர் மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் உலகநாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் உக்ரைன் போர் ஓராண்டாகத் தொடரும் சூழலில் இதில் பிரதமர் மோடியால் போரை நிறுத்த முடியுமா என்ற கேள்விக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் முக்கிய பதிலை அளித்துள்ளார்.

உக்ரைன் போர் முடியாமல் தொடரும் தொடர்ந்து கொண்டே இருப்பது உலகறிந்த விஷயம், இந்த உக்ரைன் போர் காரணமாக இரு நாடுகள் மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச பொருளாதாரமே ஆட்டம் காணும் இந்தச் சூழலில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. இருந்தாலும் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அமெரிக்கா ஊடகங்களும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முயற்சியைப் பாராட்டியிருந்தன.

இதற்கிடையே உக்ரைன் போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும் என்று தெரிவித்தார்.

உக்ரைன் போர் விவகாரத்தை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜான் கிர்பி, 'உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். இவை அனைத்தையும் அமெரிக்கா நிச்சயம் வரவேற்கவே செய்யும்.. போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். போர் மேலும் தொடராமல் நிறுத்த முடியும்.. போர் எங்களுக்கு முடிவுக்கு வந்தால் போதும்.

உக்ரைனில் மக்கள் மிகவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர், இதை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.. எப்போது பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதை அதிபர் ஜெலென்ஸ்கி தான் முடிவு செய்ய வேண்டும். அவரால் மட்டுமே அதை வலிமையான கையால் செய்ய முடியும்' என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் போரை நிறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பலமுறை இரு நாட்டு அதிபர்களிடமும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்பதைப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் குறிப்பிட்டார். இதை அமெரிக்கா, ஐரோப்பியாவும் வரவேற்றிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜெலென்ஸ்கி பிரதமர் மோடியை தொலைப்பேசியில் பேசினார் அப்போது உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.


உக்ரைன் போர் தொடர் கதையைப் போல ஓராண்டாகத் தொடர்ந்து இந்த நிலையில் உலக வல்லரசான அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உக்ரைன் - ரஷ்யா போரை பிரதமர் மோடியால் நிறுத்த முடியும் என கூறியிருப்பது உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

Similar News