தாய் ஹீராபென் படத்துடன் நின்ற இளம்பெண் - திடீரென்று காரிலிருந்து இறங்கி பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி!
கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட தன்னை பிரதமராக பார்த்தது இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்று திங்கட்கிழமையுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி வருகின்ற ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ரிட்கியில் கரீப் கல்யாண் சம்மேளனம் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அங்கு மத்திய அரசின் திட்டங்களினால் பயனடைந்த சுமார் 17 லட்சம் பயனாளிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் சார்பில் 11ம் தவணையாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா 2 ஆயிரம் ரூபாய் வர வைப்பதற்கான சுமார் 21 ஆயிரம் கோடியை விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிந்த பின்னர் திரும்பும் சமயத்தில் சிம்லாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது கையில் பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென்னின் ஓவியத்தை வைத்திருந்தார்.
இதனை பார்த்த உடனே காரை நிறுத்தி இறங்கிய பிரதமர் மோடி அப்பெண் அளித்த தாயாரின் ஓவியத்தை பெற்றுக்கொண்டார். மேலும், இந்த ஓவியத்திற்காக எத்தனை நாட்கள் செலவு செய்து வரைந்தீர்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். அதற்கு அப்பெண் ஒரு நாளிலேயே முடித்தாக கூறினார். இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu