திடுக்கிடும் சம்பவம்: கேரளாவில் 5 ஆண்டுகளில் 10 ஆர்எஸ்எஸ்-பாஜக செயற்பாட்டாளர்கள், இஸ்லாமிய அமைப்பால் படுகொலை!
Mohammad Haroon, the mastermind behind RSS worker
கேரள மாநிலம் பாலக்காட்டில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சஞ்சித் கொலையின் பின்னணியில் இருந்த, முகமது ஹாரூன் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஹாரூன், கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள அத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். மேலும் அவர் கேரளாவில் உள்ள சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) உடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
அறிக்கைகளின்படி , 27 வயதான ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித்தின் கொலையைத் திட்டமிடுவதில் ஹாரூன் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் அவருக்கு எதிராக ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது . பாலக்காடு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆர்.விஸ்வநாத் கூறுகையில், கொலை செய்யப்போகும் நபர்களை தயார்படுத்திவிட்டு, அவர்கள் தலைமறைவாக ஹாரூன் உதவியதாக தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2021-இல், சுபைர், சலாம் மற்றும் இசஹாக் என்ற மூன்று குற்றவாளிகளை காவல்துறை கைது செய்தது. சஞ்சித் கொலை வழக்கில் SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) பங்கை உறுதிப்படுத்தியது. இருப்பினும், உள்ளூர் நீதிமன்றத்தால் சலாமுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் தனது கணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த சஞ்சித்தின் மனைவி, மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணையைக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், இந்த கொலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்தக் கோரி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் 10 ஆர்எஸ்எஸ்-பாஜக செயற்பாட்டாளர்கள் இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டதாக பாஜக தலைவர் சுரேந்திரன் உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் இதுவரை 50 ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள் அவர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.