இம்ரான் கான் போஸ்டருடன் தேர்தல் பிரச்சாரம் - எல்லாமே பிளான் பண்ணித்தான் நடக்குதோ?

Update: 2022-07-06 01:43 GMT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள முல்தான் பகுதியில் இடைத்தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பரப்புரை சுவரொட்டியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மற்றும் மூஸ் வாலாவின் புகைப்படங்களைப் பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. 

சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் மூஸ் வாலா-வின் புகைப்படம் போஸ்டரில் இருப்பதால் அந்த போஸ்டர் இந்தியாவிலும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கையில், "சித்து மூஸ் வாலாவின் புகைப்படத்தால் இந்த போஸ்டர் வைரலாகியிருக்கிறது. அவரின் படத்தை போஸ்டரில் அச்சிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் போஸ்டர்கள் எதுவும் இதற்கு முன்பு இவ்வளவு வைரலாகியதில்லை" என்று அக்கட்சியை சேர்ந்தவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

படாகர் சித்து மூஸ் வாலாவை வைத்து வைரலாக்கப்படும் இந்த போஸ்டர், இந்தியாவில் இம்ரான் கான் கட்சிக்கு விளம்பரத்தை ஏற்படுத்தி தருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

Input From: Vikadan

Similar News