உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? களத்தில் தேசிய பாதுகாப்பு மீட்புப்படை.!
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? களத்தில் தேசிய பாதுகாப்பு மீட்புப்படை.!;
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அம்மாநில தலைமைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு மீட்பு படையினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த விபத்திற்கு நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆற்றங்கரையோர வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.