ஒரு கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்த உதான் திட்டம் - 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

Update: 2022-07-25 01:53 GMT

இந்திய விமான நிலையங்கள், 2021-22-ம் ஆண்டில் 83 மில்லியன் உள்நாட்டு பயணிகளை ஏற்றி சென்றுள்ளன. இது 2020-21-வுடன் ஒப்பிடும்போது, 59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தொற்று பாதிப்புக்கு முந்தைய உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் சுமார் 136 மில்லியன்(2019-20) உடன் ஒப்பிடும்போது, 2021-22-ல், போக்குவரத்து 39 சதவீதம் குறைந்துள்ளது. மான எரிபொருளின் மீது அதிக வாட் வரி விதித்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதனை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டன.

 உள்நாட்டு பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கடுத்து நாட்டில் சிறிய நகரங்களிலும், விமானங்களை இயக்கும் வகையில், உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பயன்பாட்டில் இல்லாத மற்றும் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் மறுசீரமைப்புக்காக ரூ.4,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும் 21 நகரங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 8 விமான நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

உதான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர். 2-வது மற்றும் 3-ம் தர நகரங்களை இணைக்கும் வகையில் விமானப் போக்குவரத்து சேவைக்காக இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Input From: News18

Similar News