புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹரியானா விவசாயிகள்.!

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹரியானா விவசாயிகள்.!

Update: 2020-12-08 13:55 GMT
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு விவசாய பொருட்களைச் சந்தை படுத்துவதற்கும் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மூன்று வேளாண் மசோதாக்களைக் கொண்டுவந்தது. அதனை எதிர்த்தும் திருப்பி பெறுமாறும் பஞ்சாபிலிருந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அந்த வேளாண் சட்டங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் அமைப்பின்(FPOs) ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும் மற்றும் ஹரியானாவின் முற்போக்கு உழவர் குழுக்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தற்போது போராட்டக்காரர்களால் எதிர்க்கப்பட்டு பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு, 116 ஹரியானா FPOs  மற்றும் முற்போக்கு உழவர் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவளித்துள்ளனர்.

அவர்கள் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு எழுதிய கடிதத்தில், அரசாங்கம் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இது தற்போது பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் டெல்லிக்கு வந்து இந்த சட்டங்கள் நாட்டில் எந்த விவசாயிகளும் ஆதரிக்கக்கூடாது என்று போராடி வரும் போராட்டக்காரர்களுக்கு ஒரு பின்னடைவாகவே இருக்கும். 

Similar News