கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகப் பெற்றோர்கள் உட்பட 9 பேர் கைது!

கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகப் பெற்றோர்கள் உட்பட 9 பேர் கைது!

Update: 2021-01-29 17:30 GMT
ஜனவரி 26 இல் மத்தியப் பிரதேசத்தில் இந்தோரில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகக் கட்டாயப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண், பெற்றோர்கள் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஷாலினி கௌஷல் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றத் தனது பெற்றோர்கள் சாத்தியபிரகாஷன் சஞ்சார் கேந்த்ராவிற்கு அழைத்துச் சென்றதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். 
மத்தியப் பிரதேசத்தில் மத சுதந்திர சட்டத்தின் கீழ் 11 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக SHO சந்தோஷ் தூதி தெரிவித்தார். இரண்டு குற்றவாளிகள் ரூபின் மற்றும் விபின் தலைமறைவாக உள்ளதாகவும் மற்றும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் கூடுதல் நீதிபதி யதீந்திரா குமார் குரு ஒன்பது பேரின் ஜாமீனை ரத்து செய்தார். 
கேந்திராவில் நடக்கும் கட்டாயப்படுத்தி மதமாற்றத்திற்கு ஈடுபடும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்ததாக கௌஷல் குற்றம் சாட்டையுள்ளார்.  "நான் தற்போது கடவுள் இயேசுவின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளேன் மேலும் பிரச்சனைகள் திறந்து விடும் என்று அவர்கள் கூறினார்கள்," என்று குற்றம்சாட்டியுள்ளார்.  இதுபோன்று கட்டாயப்படுத்தி மதமாற்றச் செய்யப் பல இந்துக்கள் அங்கு இருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் தனது பெற்றோர்கள் உட்பட ஒன்பது பேரைத் தன்னை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 
மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த இடத்திற்கு ஒருவர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செல்லலாம் ஆனால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்பமுடியாது என்று குற்றம்சாட்டியுள்ளார். நான் வெளியில் செல்ல முயன்ற போது சில பெண்கள் என்னைத் தாக்கினர் என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்துகின்றனர். நான் ஒரு இந்து ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற என் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர். 
இதே போன்று பல குற்றச்சாட்டுகளுடன் பல பெண்கள் முன்வந்ததாக SHO சந்தோஷ் தூதி தெரிவித்துள்ளார். கேந்திராவில் மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்துவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறை அங்குச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
250 பேர் அங்கு மூளைச் சலவை செய்யப்பட்டு இருந்ததாகச் சர்மா தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதமே சிறந்தது என்று அவர்கள் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும் நிதி சலுகை வழங்குவதாகக் கூறி மக்களை மதமாற்றம் செய்ய அழைத்து வந்ததாகச் சர்மா தெரிவித்துள்ளார். 

Similar News