MP ஆசாம் காம், தலித் விவசாயிகளிடம் மிரட்டி வாங்கிய நிலத்தை மறுபடி வழங்க கோர்ட் உத்தரவு.!

MP ஆசாம் காம், தலித் விவசாயிகளிடம் மிரட்டி வாங்கிய நிலத்தை மறுபடி வழங்க கோர்ட் உத்தரவு.!

Update: 2021-01-18 06:30 GMT

சமாஜ்வாதி கட்சியின் MP மோஹட் ஆசாம் கான் குடும்பத்திற்குச் சொந்தமான மற்றும் நடத்திவரும் மவுலானா முகம்மது அலி ஜவஹர் அறக்கட்டளைக்குச் சொந்தமான 173 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ராம்பூர் மாவட்டத்தின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

சனிக்கிழமை அன்று அறக்கட்டளை மாநில அரசின் சட்டங்களை நிலத்தை வாங்கும்போது மீறியுள்ளது மற்றும் அந்த நிலத்தைக் கைப்பற்றுமாறு துணை மாஜிஸ்திரேட்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி J P குப்தா. "அறக்கட்டளை 12 ஏக்கர்க்கு மேலாக வாங்கும் நிலத்திற்கு அரசாங்கத்தின் உத்தரவை மீறியுள்ளது," என்று ADGC-சிவில் அஜய் திவாரி தெரிவித்தார். 

அறக்கட்டளை பிற்படுத்தப்பட்டவர்களின் நிலங்கள், ஆறுகள் ஓரம் உள்ள நிலங்கள் அல்லது கிராம சமாஜ்க்கு சொந்தமான நிலத்தை வாங்கக் கூடாது ஆனால் அதனை அறக்கட்டளை மீறியுள்ளது. மேலும் அறக்கட்டளை இந்த விதிமீறல்களை உத்தரப் பிரதேசம் வருவாய் சட்டத்தின் கீழ் மீறியுள்ளது. "நீதிமன்றம் முன்னர் அறக்கட்டளையின் தலைவரான ஆசாம் கான்கு சம்மன் அனுப்பியது, ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்தார்," என்று ADGC தெரிவித்தது. 

ஜனவரி 2020 இல் பிரயக்ராஜில் உள்ள வருவாய் நீதிமன்றம், 12 தலித் விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கிய 100 பெரிய நிலங்களை கையகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. மேலும் உத்தரப் பிரதேசத்தின் நில சீர்திருத்த கான் மீறியதாகக் கண்டுபிடித்தது. 

Similar News