பழங்குடி பெண்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய தம்பதி கைது !
பழங்குடியின பெண்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற லஞ்சம் கொடுத்து மற்றும் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் உள்ள அனார் சிங் ஜம்ரே மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ஜம்ரே என்ற தம்பதியை மத்தியப் பிரதேச போலீஸார் வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவர்கள் பழங்குடியினப் பெண்களைக் குறிவைத்து, அவர்களைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியதற்காக தம்பதியினர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் மதில் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுகான் என்பவர் அளித்த புகாரில், பழங்குடியினப் பெண்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக தம்பதியினர் பணம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பிற வசதிகளை லஞ்சமாகப் பெற்றனர். சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்பட்ட தம்பதியினரின் வீடுகளுக்கு பழங்குடியின பெண்கள் அழைக்கப்பட்டனர் என்று விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், மத்திய பிரதேச மத சுதந்திரச் சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தில், மோசடி, தூண்டுதல் போன்ற சட்டவிரோத வழிகளில் மதம் மாறினால் தண்டனைக்கான விதி சேர்க்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர் மற்றும் சிறார்களை மதம் மாற்றும் வழக்குகளில் கைது செய்யப் படுபவர்களுக்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்க வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கூட அக்டோபர் 22 அன்று, போபாலில் இருந்து ஒரு மத மாற்ற வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Input & Image courtesy:Opindia