கர்நாடகாவை தொடர்ந்து மும்பையிலும் ஹிஜாப்புக்கு அதிரடி தடை!

Update: 2022-02-12 01:00 GMT

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள ஒரு கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அதிரடியான தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து மாணவ, மாணவிகளும் சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே மாண்டியா மற்றும் ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து கல்லூரிகளில் கலாட்டா செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், மும்பையில் உள்ள கல்லூரி விதிமுறை புத்தகத்தில் ஹிஜாப், துப்பட்டா உள்ளிட்டவைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கல்லூரியின் முதல்வர் லினா ராஜே கூறுகையில், கல்லூரியில் அது போன்ற ஒரு விதிமுறை இருப்பது உண்மைதான். ஆனால் அது மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அடையாளமாக திகழும் நமது முகத்தை மறைப்பது போன்ற உடைகளை கல்லூரி வளாகத்தில் அணிவது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹிஜாப் போன்று முகத்தை மறைக்கின்ற வகையில் துப்பட்டா உள்ளிட்டவைகளும் பயன்படுத்துவது கல்லூரி வளாகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த முறை விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்லூரிகளிலும் வரவாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: ETV Bharat

Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News