மும்பை: பகவான் ஸ்ரீராமரின் சுவரொட்டிகளை கிழித்த காவல்துறை - VHP தலைவர்கள் கைது!

மும்பை: பகவான் ஸ்ரீராமரின் சுவரொட்டிகளை கிழித்த காவல்துறை - VHP தலைவர்கள் கைது!

Update: 2021-01-16 17:45 GMT

வெள்ளிக்கிழமை அன்று மால்வாணி பகுதியில் வைத்து மும்பை காவல்துறை மூன்று VHP தலைவர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் அயோத்தியில் ராமர் பிறப்பிடத்தில் கட்டவிருக்கும் கோவிலுக்குப் பெரியளவில் நிதி திரட்டுவதற்காக ஒட்டப்பட்ட ராம் மந்திர் நிதி சங்களன் அபியன் குறித்த சுவோரோட்டியை ஒட்டியதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மும்பை காவல்துறை அந்த சுவரொட்டிகளைக் கிழித்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்துப் பேசிய VHP தலைவர் ஒருவர், இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை மாலை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காகப் பிரச்சாரத்தை முடித்து VHP தலைவர்கள் வருகையில் நடைபெற்றது என்று கூறினார்.அப்போது மும்பை காவல்துறை ராம் மந்திர் நிதி சங்களன் அபியன் குறித்த சுவோரோட்டியை இரண்டாகக் கிழித்தெறிவதை VHP தலைவர்கள் கண்டனர் என்று தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை சில VHP தலைவர்கள் மொபைல் போன்னில் புகைப் படம் எடுக்கத் தொடங்கினர். வீடியோ எடுப்பதைக் கண்ட காவல் அதிகாரி ஒருவர் அங்கு வந்து VHP தொண்டர்களை அடிக்க தொடங்கியுள்ளார். சுவரொட்டிகளை அகற்றுவது குறித்து'காவல்துறையிடம் கேள்வி எழுப்பியபோது. அது உள்ளுர்வாசிகளின் உணர்வுகளைத் தூண்டுகின்றது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மும்பையில் மால்வாணி பகுதியானது முஸ்லீம்கள் அதிகமிருக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று VHP தலைவர்களும் காவல்துறையை அவர்கள் வேலையைச் செய்யத் தடுத்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்களின் கைது நடவடிக்கை தொடர்ந்து RSS, VHP மற்றும் பா.ஜ.க தலைவர்கள் காவல் நிலையத்தின் வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தத் தொடங்கினர். தலைவர்கள் மூன்று நபர்களை வெளியிடக் கோரி போராட்டம் நடத்தினர். 

Similar News