கார் ஜன்னலை மூடி எஸ்கேப்..! ராகுல்காந்தியையும் விட்டுவைக்காத பஞ்சாப் - கான்வாய் மீது காங்கிரஸ் கொடியை வீசிய நதீம் கான்!

Nadeem Khan throws Congress flag on Rahul Gandhi’s convoy, watch video;

Update: 2022-02-08 02:00 GMT

பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாய் மீது இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) உறுப்பினர் நதீம் கான் காங்கிரஸ் கட்சியின் கொடியை வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தின் போது , காங்கிரஸ் உறுப்பினர் சுனில் ஜாகர் காரை ஓட்டிச் செல்ல, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ராகுல் காந்தி சாலை வழியாக லூதியானா சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையோரத்தில் இருந்து ஆரவாரம் செய்த கட்சி தொண்டர்களை வரவேற்க ராகுல் காந்தி கார் ஜன்னலை கீழே இறக்கினார். அப்போது நதீம் கான் என்பவர் திடீரென அவர் மீது கொடியை வீசினார். அப்போது ராகுல் காந்தி மீண்டும் ஜன்னலைச மூடினார். நதீம் கானிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ​​அவர் உணர்ச்சிவசப்பட்டு ராகுல் காந்தி மீது கொடியை வீசியதாக கூறினார்.

இது குறித்து பேசிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி குர்விந்தர் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான தாக்குதல் பற்றிய தகவல்கள் தவறாக வழிநடத்துகின்றன என்றார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் நான் பணியில் இருந்தேன். இது காங்கிரஸ் தலைவர் மீதான தாக்குதல் அல்ல என்றார்.

பிரதமர் மோடியின் வாகனத்தில் பாதுகாப்பு மீறல்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் ஹுசைனிவாலாவில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது . பாலத்தின் ஒரு முனையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், அவரது கான்வாய் ஒரு பாலத்தில் 20 நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது.  பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் சாலையை மறிப்பது குறித்து பஞ்சாப் காவல்துறைக்கு தெரியும், ஆனால் பாதையை சீராக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags:    

Similar News