"மேக் இன் இந்தியா" திட்டம் மூலம் இந்தியாவில் தயாரிப்பாகும் மின்சார DUKE வாகனம்!
KTM நிறுவனத்தின், பெரும் வரவேற்பை பெற்ற இருசக்கர வாகனமான DUKE மாடல், இந்தியாவில் மின்சார வாகனமாக உற்பத்தியாகவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் தன் உற்பத்தியை தொடங்குவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதன் வரிசையில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய இருசக்கர வாகன நிறுவனமான KTM நிறுவனம், இந்திய பஜாஜ் நிறுவனத்துடன் கைகோர்த்து, KTM நிறுவனத்தின் DUKE இருசக்கர வாகனத்தை முழுமையாக மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனமாக இந்தியாவில் தயாரிக்க உள்ளது.
புதிதாக அறிமுகமாக கூடிய இந்த வாகனத்தின் முக்கிய அம்சங்களாக :
10KW மோட்டார்.
5.5kWh பேட்டரி திறன்.
ஒருமுறை முழுமையாக பேட்டரிக்கு சார்ஜ் செய்துவிட்டால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம், இந்த வாகனம் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், இந்தியாவின் சந்தை வளரும், வேலைவாய்ப்பும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.