நேஷனல் ஹெரால்டு வழக்கு - இறுகும் அமலாக்கத்துறை பிடி, தப்பி ஓடும் சோனியா, ராகுல்!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு.
1937-ஆம் ஆண்டு தான் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு அவர்கள் தொடங்கினார். பின்பு இந்த நிறுவனத்தின் சார்பாக 1938 ஆண்டு நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையும் தொடங்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் சட்டத்திற்குப் புறம்பான பல பகுதிகளில் நடைபெற்ற காரணத்திற்காக வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தற்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதான் தற்போது தேசிய அரசியல் ஊடகங்களில் பேச்சு பொருளாகவும் நிறைந்து வருகிறது. எனில் இந்த வழக்கின் பின் உள்ள தீவிரம் என்ன? தற்போது ஏன் இது தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது? என்பதை தற்போது பார்ப்போம். மேலும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது இருந்து மொத்தமாக 5 ஆயிரம் பங்குகள் அப்போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயரில் வாங்கப்பட்டது.
அதன்பிறகு இந்த நிறுவனத்தின் பணத்திலிருந்து பத்திரிகை நிறுவனத்திற்கு வட்டி இல்லாத கடன் தொகையாக சுமார் 90. 25 கோடி கடனாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாத நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவனம் மூடப்படும் நிலைக்கு சென்றது. மேலும் இந்த நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த நிறுவனத்தின் இயக்குனராக ராகுல் காந்தி அவர்கள் இருந்துள்ளார் மேலும் பத்திரிக்கை நிறுவனம் வாங்கிய கடனை கட்சி பணத்தில் இருந்து அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தான் தற்போது இந்த வழக்கிற்கான விசாரணை வந்துள்ளது.
Input & Image courtesy: Junior vikatan