மாணவர்களின் மனஉளைச்சலை போக்க ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு.. மத்திய அரசு.!

மாணவர்களின் மனஉளைச்சலை போக்க ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு.. மத்திய அரசு.!

Update: 2021-02-09 10:43 GMT

மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு தேசிய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். அதே போன்று மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.

இதன் மூலமாக மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதலாம். இதில் எந்த தேர்வில் மதிப்பெண் அதிகமாக பெறுகிறார்களோ அதனை வைத்துக் கொண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். பெரும்பாலான மாணவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்காகவே இந்த தேர்வுகள் இரண்டு முறை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வு போன்று நீட் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நீட் தேர்வு புதிய நடைமுறைக்கு இந்த ஆண்டு வரும் பட்சத்தில் மாணவர்கள் இரண்டு முறை நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம். இது போன்று செய்வதால் மாணவர்களின் மனஉளைச்சல் குறைக்கப்படும் என மத்திய அரசு தகவல் கூறியுள்ளது. இது போன்று இரண்டு முறை தேர்வுகள் நடைபெற்றால் மாணவர்களுக்கும் படிப்பதற்கு எளிதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
 

Similar News