நாம் யாரையும் மதம் மாற்றத் தேவையில்லை: எப்படி வாழ்வது என சொல்லிக்கொடுத்தாலே போதும்: மோகன் பாகவத்!

நாம் யாரையும் மதமாற்றம் செய்வதற்கு தேவையில்லை. அதற்கு மாற்றாக எப்படி அனைவரும் வாழ்வது என சொல்லிக் கொடுத்தாலே போதுமானது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அதிரடியான கருத்தை கூறியுள்ளார்.

Update: 2021-11-20 06:32 GMT

நாம் யாரையும் மதமாற்றம் செய்வதற்கு தேவையில்லை. அதற்கு மாற்றாக எப்படி அனைவரும் வாழ்வது என சொல்லிக் கொடுத்தாலே போதுமானது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அதிரடியான கருத்தை கூறியுள்ளார்.


சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ஹோஷ் ஷிவிர் என்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றியதாவது: இந்தியாவை உலகளவில் விஸ்வ குருவாக உருவாக நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முன்னேறிச் செல்வது அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாக நாம் யாரையும் மதமாற்றத் செய்வதற்கு தேவையில்லை. மாற்றாக அனைவரும் எப்படி வாழ வேண்டும் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் போதுமானது.


நமது பாரத தேசத்தில் பிறந்துள்ளோம். எனவே ஒட்டுமொத்த உலகுக்கும் நாம் பாடத்தை கற்றுக் கொடுக்கத் தகுதியானவர்கள். நமது மார்க்கம் நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. மேலும், ஒவ்வொருவரும் பின்பற்றுகின்ற வழிபாட்டு முறையை மாற்றாமலேயே நமது மார்க்கம் யாரையும் சிறந்த மனிதர்களை உருவாக்கக் கூடியது. இதனை சிதைக்க முயற்சிப்பவர்கள் தேசத்தின் ஒற்றுமையால் சரி செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy:ANI


Tags:    

Similar News