நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு !

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வருடம் தோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கு மட்டும் நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2021-09-07 03:58 GMT

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வருடம் தோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கு மட்டும் நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டைவிட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் www.nta.nic.inஎன்ற இணைய தளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்து தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:DNA India

Tags:    

Similar News