"நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை" - அமித்ஷா !

Update: 2021-10-17 04:38 GMT

"நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை" என அமித்ஷா கூறியுள்ளார்.

அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  உரையாற்றும்போது 

"நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை. புகழ்பெற்ற சில விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது பங்களிப்பையும் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவியதுடன், நேதாஜியின் பிறந்த தினத்தை 'வெற்றி தினம்' ஆகவும் அறிவித்தது."

இவ்வாறு அமித்ஷா உரையாற்றினார்.

Image: OneIndia

Maalaimalar


Tags:    

Similar News