விவசாயத்துடன் தொழிற்துறையும் கை கோர்த்து நடக்க புதிய வேளாண் சட்டங்கள் உதவும்.. இந்திய தொழில் கூட்டமைப்பு நம்பிக்கை.!

விவசாயத்துடன் தொழிற்துறையும் கை கோர்த்து நடக்க புதிய வேளாண் சட்டங்கள் உதவும்.. இந்திய தொழில் கூட்டமைப்பு நம்பிக்கை.!

Update: 2020-12-20 09:38 GMT

புதிய பாதையை உருவாக்கும் சீர்த்திருத்தங்களோடு ‘ஒரே தேசம், ஒரே சந்தை’ என்பதை நோக்கி முழுமையாக  முன்னேற புதிய வேளாண் சட்டங்கள் உதவும். 

மேலும் விவசாயத்துறை பன்மடங்கு ஆதாயம்பெறுவதற்கும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள புதிய வேளாண்மை மசோதாக்கள் உதவிக்கரமாக இருக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது. 

புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, மிகவும் நல்ல முடிவு. விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் தென் மாநிலங்கள் தலைமைத்துவ இடத்தை பெறுவதற்கு புதிய வேளாண் மசோதாக்கள் முந்தைய ஊசலாட்டத்தை மாற்றும் போக்கு உடையதாக இருக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நம்புகிறது.

இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சதீஷ் ரெட்டி கூறுகையில், ‘தென்னிந்தியாவில் துடிப்பான தனியார் துறையால் ஆதரிக்கப்படும் ஒரு வளமான சூழல் இருக்கிறது. இது மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகளின் பின்னணியில் விவசாயத்துறை பன்மடங்கு வளருவதற்கு உதவிக்கரமாக இருக்கும்’ என்றார். 

துணைத்தலைவர் சி.கே.ரங்கநாதன் பேசுகையில், ‘புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வருமானங்களை பெருக்குவதாக இருக்கும்’ என்றார். மேற்கண்ட தகவல் இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவசாயத்துறை மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து தொழிற் துறைகளும் விவசாயத்துடன் கைகோர்த்து செல்லும் நிலை உருவாகும், இதனால் சமச்சீரான பொருளாதார அமைப்பு உருவாகும் . மேலும் இனி படித்தவர்களுக்கும் விவசாயத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.  படித்தவர்கள் அதிக அளவில் விவசாயத்தில் பங்கேற்கும் வாய்ப்புகள் உருவாவதால் மேலும் விவசாயம் நவீனமயமாகும், வேலை வாய்ப்பு பிரச்சினைகள் மாவட்ட அளவில் இனி குறைய தொடங்கும் என்றும் பலவேறு துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Similar News