MSME களின் நிலுவைத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துவதற்கான புதிய சட்டம்.. நிதின் கட்கரி.!

MSME களின் நிலுவைத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துவதற்கான புதிய சட்டம்.. நிதின் கட்கரி.!

Update: 2021-01-21 16:25 GMT

இந்த கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு சிறு தொழில்துறையில் ஒரு முன்னேற்ற வளர்ச்சியை மத்திய அரசாங்கம் கொண்டுவர இருக்கின்றது. புதன்கிழமை அன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் நிதின் கட்கரி, MSME யின் நிலுவையில் இருக்கும் தொகையை 45 நாட்களுக்குள் கட்டாயமாகச் செலுத்துவதற்கான ஒரு சட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இந்த முயற்சியானது ஆத்மநிர்பார் திட்டத்தை வலுப்படுத்தவும் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள ஒரு முயற்சியாகும். இந்து குறித்து அகில இந்தியத் தொழில் சங்கத்தின் தலைவர்களிடம் புதன்கிழமை     நிதின் கட்கரி உரையாற்றினார். 
"அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்(MSME) நிலுவைத் தொகையை விரைவில் செலுத்தப்படவேண்டும். இது MSME கள் எதிர்கொள்ளும் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைவும் மத்திய அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றது," என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய போது நிதின் கட்கரி தெரிவித்தார். 
மேலும் அவர் MSME களின் விற்பனையில் நிலுவையில் உள்ள தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த பொது நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தும் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவரும் ஒரு முயற்சியை முன்வைத்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Similar News