கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் காட்ட வேண்டுமாம் !
இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு வரிசையில் கர்நாடக மாநிலமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அம்மாநில அரசு தீவிர ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. தினமும் 50 ஆயிரத்துக்கும் மேல் தொற்று எண்ணிக்கை பதிவானது. தினமும் உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்து பதிவானது.
இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு வரிசையில் கர்நாடக மாநிலமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் அம்மாநில அரசு தீவிர ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.
இதனிடையே கடந்த ஒரு சில மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் சரியாக கடைப்பிடிக்காததால் மூன்றாவது அலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து கூறினர்.
இதனால் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் தினமும் 400க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகிறது. இந்த அறிகுறிகள் 3வது அலைக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாக மருத்துவர்கள் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழகம் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. அதன்படி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரு வரும்போது கொரோனா இல்லை என்ற சான்றிதழை காட்ட வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது பற்றி மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரு வரும்போது ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்ட வேண்டும். ஒருவேளை பரிசோதனை இல்லாமல் வருபவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்படும்.
அந்த முடிவுகள் வரும்வரை அவர்கள் அரசின் கண்காணிப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதற்கான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யும் எனக்கூறினார்.