பெண்களுக்கு நைட் ஷிப்ட் இருக்கக்கூடாது - பெண்களை பாதுகாக்க யோகி அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்!

Update: 2022-05-30 04:31 GMT

பணியிடங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்ற நோக்கத்தில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக பிறப்பித்து வருகிறது. அதன்படி உத்தர பிரதேச மாநிலம், முழுவதும் பெண்கள் இரவு நேர பணியை செய்வதற்கு அனுமதிக்கபட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

மேலும், தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்களை இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் அவரது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பணியில் சேர்க்க கூடாது. அதே சமயம் அவர்கள் பணியாற்றும் நேரங்களில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி மற்றும் உணவு உள்ளிட்டவைகளை நிர்வாகம் வழங்க வேண்டும்.

இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணி வரை பணியாற்ற மறுக்கின்ற பெண்களை பணியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று உபி அரசு அதிரடி காட்டியுள்ளது. இந்த புதிய உத்தரவுகளுக்கு பெண்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் வந்த பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் மக்கள் செல்வாக்கு மேலும், மேலும் பா.ஜ.க.வு க்கு உயர்ந்து வருகிறது.

Source:Asianetnews

Image Courtesy:Scrool.in

Tags:    

Similar News