வேலையில்லா கிராமப்புற இளைஞர்களுக்கு குட் நியூஸ்: மத்திய அரசு கொடுத்த புது அப்டேட்!

கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் 31,000 வேலை வாய்ப்புகள்.

Update: 2023-03-28 09:48 GMT

கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தீனதயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா திட்டத்தின் கீழ், 31,067 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்யப்பட்ட 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், 31,067 கிராமப்புற ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கையெழுத்திடுகிறார். இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே, தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவுறுத்தலின்படி, இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கிராம மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொழில் நிறுவனங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.


இளைஞர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிப்பதுடன், தமது நிறுவனம் மற்றும் தம்மைச் சார்ந்த நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தவேண்டும். அதாவது, இளைஞர்களை தேர்வு செய்தல், தேவையான பயிற்சிகளை அளித்தல், பணியில் அமர்த்துதல் ஆகியவற்றின் அடிப்படையில், வேலைவாய்ப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தேவைக்கேற்ப, திறன் படைத்தவர்களாக இளைஞர்களை மாற்றி வேலைவாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News