குடியரசு தின வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான லகா சிதானா வெளியிட்டுள்ள புதிய வீடியோ.!

குடியரசு தின வன்முறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான லகா சிதானா வெளியிட்டுள்ள புதிய வீடியோ.!

Update: 2021-02-20 18:32 GMT
குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக கேங்ஸ்டர் லகா சிதானா மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததில் இருந்து தலைமறைவாக இருந்து வந்த அவர் விவசாய தலைவர் ராகேஷ் திகைட் மீது மற்றும் மத்திய அரசாங்கத்தை விமர்சித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏழு மாதங்களுக்கு மேலாக விவசாய போராட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றது மற்றும் மக்கள் டெல்லி காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்துச் செயல்படவேண்டும் என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் அந்த வீடியோவில் பேசியிருந்தார். 
"தங்களுக்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்குப் பதிவு செய்து மக்களிடையே அச்சத்தை அரசாங்கம் உண்டாக்குகின்றது," என்று லகா சிதான கூறியிருந்தார்.
 
மேலும் இவர் மறைமுகமாக விவசாய தலைவரை ராகேஷ் திகைட்டை பஞ்சாபைச் சேராத ஒருவர் தற்போது போராட்டத்தைத் தலைமை தாங்குவதாக விமர்சித்தார். பிப்ரவரி 23 இல் மெஹ்ராஜில் விவசாய கூட்டத்தை ஏற்பாடு செய்யப்போவதாகவும் மற்றும் மக்கள் அதிகளவில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்வதாக 
லகா சிதானா வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும் பஞ்சாபிஸ் தங்கள் மொழியை மேம்படுத்துமாறும் கூறியிருந்தார். 
குடியரசு தின வன்முறையில் லகா சிதானா டெல்லி காவல்துறையால் கைது செய்யப்படவிருந்தார் ஆனால் வன்முறை அதிகரித்ததால் அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இவரை வன்முறையைத் தூண்டியதற்காக டெல்லி காவல்துறை கைது செய்யத் தேடி வருகின்றது. பஞ்சாபில் அவர் இருப்பதாகச் சந்தேகப்படுவதாகவும் மற்றும் தேடுதல் நடைபெற்று வருகின்றதும் என்றும் கூறியுள்ளனர். 

 
டெல்லி காவல்துறை செங்கோடையில் நடந்த வன்முறை தொடர்பாக தீப் சிந்து மற்றும் லகா சிதானா மீது FIR பதிவு செய்திருந்தது. லகா சிதானாவை கைது செய்ய உதவுபவர்களுக்கு 1 லட்சம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளது. 
 

Similar News