தடுப்பூசி வல்லரசாக உருவெடுத்தது இந்தியா! நியூயார்க் டைம்ஸ் புகழாரம்!

தடுப்பூசி வல்லரசாக உருவெடுத்தது இந்தியா! நியூயார்க் டைம்ஸ் புகழாரம்!

Update: 2021-02-15 17:23 GMT
இந்தியாவில் இருந்து அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை மெக்ஸிகோ ஒரு மில்லியன் டோஸ் பெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஸ்பானிஷ் மொழியில் நட்பை வெளிப்படுத்துகிறோம் என ட்வீட் செய்துள்ளார். அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.


 
முன்னதாக, டொமினிகா மற்றும் பார்படாஸ் கடந்த புதன்கிழமை தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ் மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றன. மேலும் பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கும் உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துப்படி, இந்தியா உலக சமூகத்திற்கு 229.7 லட்சம் டோஸ் தடுப்பூசியைக் கொடுத்துள்ளது. இவற்றில் 64.7 லட்சம் டோஸ் மானியமாக வழங்கப்பட்டது. 165 லட்சம் டோஸ் வணிக அடிப்படையில் வழங்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், வரும் வாரங்களில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கேரிகாம் மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தியா தனது தடுப்பூசி இராஜதந்திரத்திற்காக சர்வதேச ஊடகங்களால் பாராட்டப்பட்டது. "உலகளாவிய தடுப்பூசி இராஜதந்திர பந்தயத்தின் ஆச்சரியமான தலைவராக இந்தியா உருவெடுத்துள்ளது. இது தனது சொந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமான அளவை ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் அதன் சொந்த வெளியீட்டை பாதிக்காமல் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும்"  என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் எரிக் பெல்மேன் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சுமத்தப்பட்ட கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது இந்தியாவை கேலி செய்த நியூயார்க் டைம்ஸ், தனது அறிக்கையில், "ஒப்பிடமுடியாத தடுப்பூசி உற்பத்தி சக்தியான இந்தியா, அண்டை நாடுகள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கும் மில்லியன் கணக்கான அளவு தடுப்பூசிகளை அளிக்கிறது" என புகழாரம் சூட்டியுள்ளது. 

Similar News