ஓட்டு வங்கியின் அரசியல் காரணமாக ஐதராபாத் விடுதலை நாளை புறக்கணித்த அரசியல் கட்சிகள்! அமித் ஷா அதிரடி..!
மத்திய உள்துறை அமைச்சர், இதுவரையில் எந்த அரசும் கொண்டாடாத ஹைதராபாத் விடுதலை நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டாட முடிவு செய்தது என தெரிவித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்று ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. இப்படி ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்த தினத்தை ஐதராபாத்தின் விடுதலை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விடுதலை தினத்தை கொண்டாடும் வகையில் ஐதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதையும் அளித்தனர், அதனை ஏற்றுக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்று வைத்து விழாவில் சிறப்புரையாற்றினார். அச்சிறப்புறையில் அமித் ஷா, ஐதராபாத்தில் விடுதலை தின நாள் என்பது ஐதராபாத் மக்களுக்கு அசைக்க முடியாத தேசபக்தியையும் நிஜாமின் அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஒரு இடைவிடாத போராட்டத்திற்கும் சான்றாக அமைந்துள்ளது. இவ்வளவு காலமாக ஐதராபாத்தின் விடுதலை நாளை அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளனர் அவை அனைத்திற்கும் ஓட்டு வங்கி அரசியலே காரணம்! இவ்வளவு சிறப்பு மிக்க ஒரு வரலாற்று நாளுக்கான பெருமை அனைத்தும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கே சேரும் என்று உரையாற்றினார்.
Source - Dinamalar