பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்று அழைக்கக்கூடாது! புதிய பெயரை சுட்டிய பிரதமர்!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்வதால் இதுவரை பயன்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் பெருமை குறையக்கூடாது என்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி
கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை பயன்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் தனது கடைசி உரையை பிரதமர் நிகழ்த்தினார். அந்த உரையில் மங்களகரமான விநாயகர் சதுர்த்தியில் நாம் இங்கிருந்து பிரியாவிடை பெற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல போகிறோம். மேலும் நான் உங்களிடம் ஒரு வேண்டுகோளை விடுகிறேன் நீங்கள் அதனை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்! தற்போது நாம் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்வதால் இதுவரை பயன்பாட்டில் இருந்து நாடாளுமன்ற கட்டிடமான நம் வீட்டின் பெருமை ஒருபோதும் குறைய கூடாது மேலும் பழைய நாடாளுமன்றம் என்றும் இதனை அழைக்கக் கூடாது, ஆதலால் இன்றிலிருந்து இந்த கட்டிடம் சம்விதன் சதன் என்று அழைக்கப்பட வேண்டும் இந்த பெயரை நாம் அழைக்கும் பொழுது நமக்கு எப்பொழுதும் அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்று உரையாற்றினார். இந்த உரைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எம்பிகளையும் சம்விதன் சதன் எனப்படும் அரசியலமைப்பு மாளிகையில் இருந்து புதிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். முன்னதாக அரசியலமைப்பு மாளிகையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.
Source - Asianet news tamil