மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவை பார்லிமென்ட் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த உரையில் இப்படி ஒரு சாதனையை பாஜக படைப்பதற்கு கோடிக்கணக்கான மக்கள் உறுதுணையாக இருந்து எங்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு மிகவும் பெருமையாக உள்ளது. அந்த வகையில் இந்த மசோதா இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நம் புதிய வரலாற்றை படைக்கும் தருணம் ஆகும். மேலும் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு ஒரு புதிய சகாப்தம் தற்போது படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று சதாப்தங்களாக பாஜக, ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டது. அந்த முயற்சிகளின் பிரதிபலனாகவும் முன்பு நான் அளித்த உறுதி மொழியை நிறைவேற்றியும் தற்போது மகளிருகான இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கியுள்ளது என்று தனது பெருமையையும் பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது எனவும் உரையாற்றினார்.
பிறகு இவ்விழாவில் கலந்து கொண்ட பாஜக பெண் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Source - Dinamalar