தமிழக மாணவர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய அறிவுரை!
மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கடந்தாண்டு இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த நிலையில் இன்று 51ஆயிரத்து 56 பேருக்கு காணொளி வாயிலாக பணி நியமனங்களை வழங்கும் விழாவை துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு அவர்களுடன் உரையாற்றினார். அந்த உரையாடலில் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்று கூறி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் மத்திய அரசு சார்ந்த வேலைகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்காததால் தமிழகத்தில் இருக்கும் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது! தற்போது தமிழிலும் தேர்வெழுத வாய்ப்பு உள்ளதால் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எந்த மாநிலத்தில் பணிக்கு செல்கிறோமோ அங்கு அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
Source - Dinamalar