என் பெயரில் கூட வீடு இல்லை! குஜராத் வளர்ச்சி திட்ட விழாவில் பிரதமர்!

Update: 2023-09-28 01:23 GMT

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று ரூபாய் 5,206 கோடி மதிப்பிலான கிராம வைஃபை வசதிகள் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழா சோட்டா உதேபூரில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மிஷன் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்ற பெயரில் ரூபாய் 4,505 கோடி மதிப்பில் ஆன திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 9,088 புதிய வகுப்பறைகள், 50,300 ஸ்மார்ட் வகுப்பறைகள், 19,600 கணினி ஆய்வகங்கள் என்ற பல நலத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. அதோடு குஜராத் மாநிலத்தில் உள்ள 7500 கிராமங்களில் கிராம வைஃபை வசதிகளை ஏற்படுத்த உள்ளதாகவும் இதன் மூலம் 20,000 பேர் பயனடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் உரையாற்றினார்.

அதில் என் பெயரில் கூட வீடு இல்லை ஆனால் தற்போது அதிக மகள்களின் பெயரில் வீடு இருக்கிறது அதற்காக நான் அதிகமாக உழைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

Source - Dinamalar

Similar News