இந்தியா உலகப் பொருளாதார சக்தியாக உருவாக்கும்.. பிரதமரின் அசைக்க முடியாத நம்பிக்கை..
குஜராத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் இருக்கும் வகையில் கடந்த 2003ஆம் ஆண்டு துடிப்பான குஜராத் என்ற பெயரில் உச்சி மாநாடு தொடங்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பு முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் இருபதாவது உச்சி மாநாட்டின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குஜராத்தின் அகமதாபாத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கும் மாநில அரசு ஏற்பாடு செய்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறார். அப்பொழுது அவர் குஜராத் திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர் கொண்ட இன்னல்களிலும் பட்டியலிட்டார்.
குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு முன் துடிப்பான குஜராத் திட்டங்களுக்கு சிறு விதைகளை நாங்கள் விதைத்தோம். இன்று அது பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. இன்று துடிப்பான குஜராத்தில் வெற்றியை உலகம் பார்க்கிறது. குஜராத்தின் முதல் முதலாக முதல் மந்திரியாக பதவியேற்று பொழுது 2001 ஆம் ஆண்டு பூகம்பம், முந்தைய ஆண்டு வரட்சி, கூட்டுறவு வங்கிகளின் சரிவு போன்ற பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டோம். குஜராத் ஒருபோதும் காலூன்றி நிற்காது என்று கூறப்பட்டது. அவற்றுக்கு மத்தியில் எந்த சூழ்நிலையிலும் குஜராத்தில் இதிலிருந்து வெளியே எடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்தேன். அதற்கு துடிப்பான குஜராத் திட்டம் ஒரு முக்கிய ஊடகமாக இருந்தது.
மாநிலத்தை இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்ற இந்த திட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்தோம். இது உண்மையாகி வருவதை நாடுகள் பொது பார்த்து வருகிறது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது இந்தியாவில் உலகளாவிய வளர்ச்சி இயந்திரமாக மாற்ற வேண்டும் என்பதை எனது நோக்கமாக இருந்தது. விரைவில் உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க நாங்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy:News