மத்திய அரசால் கொண்டு வரப்படும் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்துவதில் தாமதத்தையும் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் விருதுநகர், ராஜபாளையத்தில் உள்ள கைவினை கலைஞர்களுடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று உரையாடி உள்ளார். அப்பொழுது மத்திய அரசு கொண்டுவரும் பல நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் தாமதத்தமும் குறைபாடுகளும் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது கைவினை கலைஞர்களான உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது, அதுமட்டுமல்லாமல் விஸ்வகர்மா தொழிலாளர்களாகிய நீங்கள் இல்லாமல் தொழிற்சாலை, விவசாயம் போன்ற எதுவும் வளர முடியாது. ஆனால் விஸ்வகர்மா திட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான சலுகைகளை பெற வேண்டும் என்ற முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார். ஆனால் இங்கு இருக்கும் சிலர் அனைத்தையும் அரசியலாக பார்க்கிறார்கள். அதோடு இத்திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்றும் தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்றும் தவறாக பரப்புகிறார்கள்! என்று பேசியுள்ளார்.
Source - Dinamalar