காவிரி நீர் விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர்!

Update: 2023-10-03 03:04 GMT

ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் சூழ்நிலை நிலவுகிறது - பிரதமர் நரேந்திர மோடி. 

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் ரூபாய் ஏழாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து மக்களிடம் உரையாற்றினார். அப்பொழுது இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொன்றுமே மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதுடன் வேலை வாய்ப்பையும் உருவாக்கும் தன்மை கொண்டது.

ராஜஸ்தானில் கடந்த கால பாரம்பரியம், நிகழ்காலத்தின் வலிமை, எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகள் ஆகிய மூன்று திரிசக்திகள் நாட்டின் வலிமையை அதிகரிக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் நத்துவாராவில் வளர்ச்சி பெற்று உள்ள சுற்றுலா, கலாச்சார மையம் மற்றும் கோடாவில் உள்ள ஐஐஐடி வளாகத்தின் நிரந்தர கட்டிடம் போன்றவை உள்ளடங்கும். அதற்குப் பிறகு அம்மாநில கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி காவிரி விவகாரம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார், அதாவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு தண்ணீர் தருவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், தான் குஜராத் மாநிலத்திற்கு முதலமைச்சராக இருந்த பொழுது ராஜஸ்தான் மாநிலத்திற்கு தண்ணீரை தடையின்றி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Source - The Hindu & Puthiyathalaimurai

Similar News