வாரிசுகளை முன்நிறுத்துவதற்கு இது ஒன்றும் மன்னராட்சி அல்ல! பிரதமரின் அதிரடி பேச்சு!
இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் பாஜக தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் சில அதிர வைக்கும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருகின்ற தெலுங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார் என பிரதமர் கூறினார். மேலும் பாஜக ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 48 இடங்களில் வென்ற போது அவருக்கு ஆதரவு தேவைப்பட்டது, அதனால் அந்த தேர்தலுக்கு முன்பு வரை விமான நிலையத்திற்கு வந்து அவர் என்னை வரவேற்பார் ஆனால் திடீரென அவை அனைத்தையும் நிறுத்திவிட்டார்.
தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் என்னை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் சேர்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து மறுத்தேன், அதோடு அவரது மகனை அரசியல் வாரிசாக்கவும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன் ஏனென்றால் இது ஒன்றும் மன்னர் ஆட்சி கிடையாது! மக்களாட்சி! என்று அதிரடியாக பேசியுள்ளார்.
Source - ABP Nadu & Dinamalar