நாளை தொடங்குகிறது தமிழகம் டூ இலங்கை கப்பல் சேவை; முன்பதிவு அவசியம்!

Update: 2023-10-09 03:29 GMT

சுமார் 40 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் கடல் வழி போக்குவரத்து ஆக இலங்கைக்கு பயணிகளை கப்பல்களில் ஏற்று செல்லும் சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் நேற்று காலை நாகையிலிருந்து இலங்கை மாகாணம் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகளின் கப்பல் சோதனை ஓட்டம் தொடங்கியது. அந்த சோதனை ஓட்டத்தில் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்தனர்.

அதுமட்டுமின்றி மூன்று மணி நேரத்தில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இந்த கப்பல் சென்று அங்கிருந்து நாகை துறைமுகத்திற்கு மாலை வந்து சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற அதே சோதனை ஓட்டம் போன்று இன்று காலையில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அதனை தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி ( நாளை) முதல் தமிழகத்தில் நாகையிலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த கப்பல் பயணத்தில் பயணிக்க விரும்புபவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தில் இருக்கும் பயணிகளின் முனையத்தில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு டிக்கெட்டின் விலை ₹7670 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Source - Indian Express Tamil 

Similar News