சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு ஆய்வு.. அதிரடி காட்டும் மத்திய அமைச்சகம்..

Update: 2023-10-13 10:30 GMT

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் இந்த ஒரு கண் ஆய்வின் கீழ் யாராவது வரி எயிப்பு செய்து இருந்தால் அவர்கள் மீது கருப்பு பணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் செய்தி ஒன்றை அளித்து இருக்கிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக ஆரம்ப காலத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகிறது. இப்படி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய முடியும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.


அதிகமான நபர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் கருப்பு பணங்களை இப்படி வங்கிகளில் போட்டு வைத்திருப்பதன் காரணமாக தற்போது சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இதுபற்றி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா சமீபத்தில் அடித்த பேட்டியின் போது குறிப்பிட்டு இருக்கிறார். சுவிஸ் வங்கிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற உடன்படிக்கை இருக்கிறது.


இதன்படி இந்தியா உடனான முதல் தகவல் பரிமாற்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது வருடாந்திர தகவல் பரிமாற்றமானது. வரி செலுத்துவோர் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய நிதி கணக்குகளை தங்களது வரிப்பணங்களில் சரியாக அளித்துள்ளனவா என்பதை சரி பார்க்க இது அனுமதிக்கு அனுமதி செய்கிறது. அந்த வகையில் தற்பொழுது ஐந்தாவது முறையாக தகவல் பரிமாற்றம் கிடைத்து இருக்கிறது. இதன்படி பல்வேறு நபர்களின் கணக்குகள் சிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News