ஐ எம் எஃப் கணிப்பிற்கு பிரதமரின் பாராட்டு!

Update: 2023-10-13 12:00 GMT

பன்னாட்டு நிதியம் ஐ எம் எப் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 சதவீதம் அதிகமாகி 6.3 சதவீதமாக உயர்த்தி இருக்கிறதாக கணித்து இருந்தது. அதாவது உலகளாவிய வளர்ச்சிக்கு அனுப்பி மூன்று சதவிகிதம் இந்தியா குறைந்தாலும் கூட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பதை பன்னாட்டு நிதியம் கணித்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை குறித்து பாராட்டி உள்ளார். எங்கள் மக்களின் வலிமை மற்றும் திறன்களால் இந்தியா உலகின் பிரகாசமான புள்ளியாகவும் வளர்ச்சி மற்றும் புதுமைகளின் சக்தியாகவும் இருக்கிறது. மேலும் வளமான இந்தியாவை நோக்கி நமது பயணத்தை செலுத்தி வலுப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். 


அதுமட்டுமின்றி 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியானது 6.3% முன்னேற்றம் கண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாகவும் தற்போது பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்தியா இந்த இரண்டு ஆண்டுகளில் "உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது". 

 Source - Dinamalar

Similar News