பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஏலியையும் மக்களுக்கு நிதி உதவிகளை பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கி வருகிறது. அந்த வகையில் பிரதமரின் திட்டத்தின் உருமாற்ற தாக்கம் குறித்த தெளிவான அறிக்கை தற்பொழுது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கட்டுரை ஆழமான பதிவுகளை பதிவு செய்து இருக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடி அரசாங்கம் தொடங்கப்பட்ட இந்த குறிப்பிட்ட காரணமாக பல்வேறு மாற்றங்கள் அடைந்து இருப்பதையும் அந்த ஒரு அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.
பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் உருமாற்ற தாக்கம் குறித்த தெளிவான நிலையை எடுத்துரைக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் ஆழமான ஆய்வை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பகிர்ந்து கொண்டார். எஸ்.பி.ஐ குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் நடத்திய ஆராய்ச்சி, இந்தத் திட்டத்தின் உள்ளடக்கிய தன்மையை குறிப்பிடுவதுடன், இது எவ்வாறு நிதி அதிகாரமளித்தலுக்கு வழிவகுத்தது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது, "பாரத ஸ்டேட் வங்கியின் சௌமியா காந்தி கோஷின் இந்த ஆழமான ஆராய்ச்சி, பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் உருமாற்ற தாக்கத்தைப் பற்றிய மிகத் தெளிவான நிலையை எடுத்துரைக்கிறது. இது, இந்தத் திட்டத்தின் உள்ளடக்கிய தன்மையைக் குறிப்பிடுவதுடன், எவ்வாறு நிதி அதிகாரமளித்தலுக்கு வழிவகுத்தது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது"
Input & Image courtesy: News