பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற் கொள்கிறார். 30ம் தேதி காலை, 10:30 மணிக்கு, அம்பாஜி கோவிலில் பூஜை மற்றும் வழிபாடு செய்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் மெஹ்சானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவர் கெவாடியாவுக்குச் செல்கிறார், அங்கு அவர் ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் நடைபெறும். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,, நிறைவடைந்த புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின் காலை, 11:15 மணிக்கு, 98-வது பொது அடித்தளப் பாடத்திட்டப் பிரிவில் பயிற்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.
மெஹ்சானாவில் பிரதமர் ரயில், சாலை, குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பல துறைகளில் சுமார் 5800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் (டபிள்யூ.டி.எஃப்.சி) புதிய பாண்டு-நியூ சனந்த் (என்) பிரிவு அடங்கும். காந்திநகர் மாவட்டத்தின் விஜாபூர் தாலுகா மற்றும் மான்சா தாலுகாவின் பல்வேறு கிராம ஏரிகளை செறிவூட்டுவதற்கான திட்டம், மெஹ்சானா மாவட்டத்தில் சபர்மதி ஆற்றின் மீது வலசானா தடுப்பணை, பாலன்பூர், பனஸ்கந்தாவில் குடிநீர் வழங்குவதற்கான இரண்டு ஆகிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமரால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில் மஹிசாகர் மாவட்டத்தின் சாந்த்ராம்பூர் தாலுகாவில் நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் திட்டமும் அடங்கும். நரோடா - தெஹ்காம் - ஹர்சோல் - தன்சுரா சாலை, சபர்கந்தாவை அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல், காந்திநகர் மாவட்டத்தில் கலோல் நகர்பாலிகா கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டம், மற்றும் சித்பூர் ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
Input & Image courtesy: News