நீங்களே உங்களுக்கு சேவை செய்யும் பணியை வழங்கினீர்கள்! சூரஜ்பூரில் பிரதமர் உரை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில், ஜனாதிபதியாக திரௌபதி மூலமாக பொறுப்பேற்பதை தடுக்க காங்கிரஸ் கடுமையான செயலை செய்தது ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ஆவார் என்று யாரேனும் நினைத்துப் பார்த்து உள்ளீர்களா? ஆனால் ஆதிவாசி சமுதாயத்தை சேர்ந்த பெண்ணிற்கு பெருமை கிடைப்பதை பாஜக உறுதி செய்து நடத்தி காட்டியுள்ளது.
மேலும் ஆதிவாசிகளுக்கு பணம் செலவழிப்பதை வீண் என காங்கிரஸ் தன் ஆட்சியில் தெரிவித்தது. ஆனால் தற்பொழுது 10 கோடி வரையிலான ஆதிவாசி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காகவே பாஜக பணியாற்றியது காங்கிரஸ் அவர்களின் நலம் குறித்து சிந்தித்ததே இல்லை! மத்திய பட்ஜெட்டில் பாஜக இந்த ஆட்சியில் ஐந்து மடங்கை அவர்களுக்காக அதிகப்படுத்தி உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பிறந்தவன் நான் நீங்களே உங்களுக்கு சேவை செய்யும் பணியை வழங்கினீர்கள் என பேசினார்.
Source : Dinamalar