அண்டை நாடுகளுக்கு முதலில் உதவும் கொள்கையை கொண்டுள்ள இந்தியா.... நேபாளத்திற்கு இந்தியா செய்த உதவிகள்!

Update: 2023-11-08 09:58 GMT

கடந்த மூன்றாம் தேதி நேபாளத்தில் ஜாஜர்கோட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 157 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்தியா 10 கோடி மதிப்புள்ள தார்பாலின் சீட்கள், போர்வைகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், எளிதாக உபயோகப்படுத்தப்படும் வெண்டிலேட்டர்கள் என நிவாரணப் பொருள்களை நேபாள்கஞ்ச் நகருக்கு இந்திய விமானப்படையின் சி - 130 ஜே ரக சரக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளது. 


மேலும் மற்றொரு சி - 130 ஜே விமானத்தின் மூலம் நேற்று முன்தினம் ஒன்பது டன்னிற்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை இந்திய நேபாள்கஞ்ச் பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஆப்ரேஷன் மைத்ரி என்ற பெயரில் இதுவரை மொத்தம் 21 டன் நிவாரண பொருட்கள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 9 டன் மதிப்புள்ள அவசர நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் நேபாளத்தில் தரையிறங்கியது. இந்த கடினமான நேரத்தில் நேபாளத்திற்கான இந்தியாவின் ஆதரவு வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Source : The Hindu Tamilthisai 

Similar News