மாலத்தீவுகள் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த மாலத்தீவுகள் அதிபர் முகமது மூயிஸ்.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ்விற்கும் எதிர்க்கட்சியாக உள்ள மக்கள் தேசிய காங்கிரஸின் முகமது மூயிஸ் இருக்கும் இடையே அதிபர் தேர்தல் போட்டி நடைபெற்றது அந்த தேர்தலில் இருவருக்குமே 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் கிடைக்காத காரணத்தினால் சமீபத்தில் மீண்டும் அதிபர் தேர்தல் மாலத்தீவுகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முகமது மூயிஸ் 53 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பிற்கு பிறகு வருகின்ற 17ஆம் தேதி அன்று முகமது மூயிஸ் அதிபராக பதவி ஏற்க உள்ளார் அந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பை மாலத்தீவுகள் அதிபர் முகமது மூயிஸ் விடுத்துள்ளார். இதனை மாலதித்தீவுகள் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதிபடுத்தி உள்ளார்.
Source : Dinamalar