பாஜக தலைமையில் ஆளும் மத்திய பிரதேசத்தில் வருகின்ற 15ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாஜக சார்பில் நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது . மேலும் தொலைநோக்கு ஆவணம் என்ற பெயரில் அந்த அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதையும், பாஜகவின் நம்பிக்கையும் என்று கட்சியை தெரிவித்து இருக்கிறது. தொலைநோக்கு ஆவணம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் என்ன காரணம் என்று? பல்வேறு தரப்பினரும் அதற்கு உள்ள வாக்குறுதிகளை உற்று நோக்கி வருகிறார்கள்.
கட்சியின் தேசியத் தலைவர் ஜெபின் நட்டா அவர்கள் வெளியிட்டுள்ள 96 பக்கதாயத்தில் அருகில் ஏராளமான வாக்குறுதிகள் இதில் வழங்கப் பட்டிருக்கின்றன. இதில் முக்கியமான கோதுமை குறைந்தபட்ச ஆதரவுகளை ரூபாய் 2700 நெல்லுக்கு ரூபாய் 3100 வழங்கப்படும் என்று கூறப் பட்டிருக்கிறது. பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மூன்று லட்சம் கோடி பட்ஜெட் உருவாக்கப்படும். மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதுடன், சீருடை புத்தகங்கள் மற்றும் பை ஆகியவற்றில் வாங்குவதற்கு ஆண்டுதோறும் 1200 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஏழை பெண்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவருக்கும் வேலை அல்லது சுய வாய்ப்புக்கான வழியை அரசு உருவாக்கி கொடுக்கும், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 450 ஆக வழங்கப்படும் என்று பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்று இருக்கிறது.
Input & Image courtesy: News