நாடு முழுவதும் அனைத்து இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை உள்ளது போன்று நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அபார் என்ற தனி அடையாள அட்டையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் எஸ் என் திட்டத்தை அடிப்படையாக வைத்து 2009 ஆம் ஆண்டு நந்தன் நீல்கேனியின் தலைமையில் இந்திய நாட்டில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த 12 இலக்கு எண்களைக் கொண்ட அடையாள அட்டை ஆதார் ஆகும். இந்த அடையாள அட்டை வந்த பிறகு அனைத்திற்கும் முதல் ஆதார அட்டையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு என தனித்துவ அடையாள அட்டையை வழங்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையில் மாணவர்களின் கல்வி சார்ந்த முழு விவரமும் அவர்களின் கூடுதல் திறமைகளும் பதிவு செய்யப்பட உள்ளதாகவும், தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவை கொண்ட அட்டையாகவும், மேலும் இந்த அட்டை ஆதாரில் உள்ள தகவலின் படி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசால் வழங்கப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டிருக்கும் மாணவ, மாணவியர்களின் அடையாள அட்டையின் பெயர் அபார் (APAAR - Automated Permanent Academic Account Registry) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : Dinamalar